பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

202



திருக்குறளார் தெளிவுரை 202 6. 40. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான். 1006 தானும் நுகர்ந்து அனுபவியானாகி தகுதியுடையவர்களுக்குக் கொடுப்பதென்னும் ஈகையும் செய்யாதவனானால், அவன் அந்த இரண்டும் செய்வதற்குரிய செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான். அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. “1007 ஒருபொருளும் இல்லாதவர்களுக்கு அவர் வேண்டிய தொன்றனைக் கொடுக்காதவனுடைய செல்வம் வீணாகக் கழிதல், பெண்களில் மிக்க அழகினைப் பெற்றாள் ஒருத்தி மணமாகாமல் கொழுநன் இன்றித் தனியளாய் மூத்த தன்மை அடைந்தது போன்றதாகும். - நச்சப் படாதவன் செலவம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று. 1008 ஈகைத் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாத ஒருவன் செல்வம் பெற்றிருத்தலானது. ஊரின் நடுவில் இருக்கும் நச்சுமரம் பழுத்ததைப் போன்றதாகும். . அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009 நண்பர்கள் சுற்றத்தார் முதலியவர்களிடம் அன்பில்லாமல் வேண்டியவற்றை நுகராமல் தன்னையும் வருத்திக்கொண்டு வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தினையும் செய்ய நினையாமல் சேர்த்த சிறந்த பொருளினைப் பிறர் கொண்டுபோய்ப் பயன் அடைவார்கள். சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010 புகழினை உடைத்தாகிய செல்வத்தினைப் பெற்றவரது சிறிதுகால வறுமை, உலகத்தினைக் காப்பாற்றுகிற மேகம் வறுமை மிகுந்தது போல்வதோர் தன்மையினை உடையது.