பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால்

அங்க இயல்203



பொருட்பால் ஒழிபு இயல் 203 1 Ο2. நாண் g2_6ty>i_6ty>í I> (இழி செயல்களைச் செய்ய நாணுதல்) 1. கருமத்தான் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. 1011 நன்மக்களுடைய நாணம் என்பதாவது இழிந்த செயல்கள் செய்ய நாணுதலாகும். அப்படி இன்றி மனம் மொழிமெய்கள் ஆகின்ற பிற அடக்கத்தினால் வருகின்ற நாணம் என்றால் அது அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண வேண்டிய தன்மைகள் ஆகும். 2. ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறல்ல நாண்உடைமை மாந்தர் சிறப்பு. Í Új 2 உணவும் உடையும் மற்றவைகளும் எல்லா உயிர்களுக்கும் பொதுவேயாகும். நன்மக்களுக்குச் சிறப்பாவது நானமுடைமையே யாகும்; மற்றவை யல்ல என்பதாம். 3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. 1013 எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதை விடாதிருப்பனவாகும். அதுபோல சால்பு என்ற உயர்ந்த தன்மை, நாணம் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அதனைவிடாது. 4. அணியன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல் பிணியன்றோ பீடு நடை. 1314 சான்றோர்களுக்கு நாணுடைமை என்பது ஆபரணமாகும். அந்த ஆபரணம் இல்லையானால், அவருடைய பெருந்தன்மையான நடை கண்டார்க்குப் பிணியாவதொன்றாம். 5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு. 1015 பிறர்க்கு வரும் பழியையும் ஒரு சமமாக மதித்து நானுவாரை.உலகத்தார் நாணம் என்பதற்கு உறைவிடம் என்று கூறுவர்.