பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

204



திருக்குறளார் தெளிவுரை 204 6. நாண்வேலி கொள்ளது மன்லோ வியன்ஞாலம் 10. பேணலர் மேலா யவர். 1 (348 உயர்ந்த மக்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தினைக் கொள்ளுவதல்லாமல் அகன்ற ஞாலத்தினைக் கொள்ள விரும்ப மாட்டார்கள். . நானால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். 101.7 நாணத்தினது சிறப்பினை அறிந்து அதன்வழி நிற்பவர்கள் அந்த நாணமும் உயிரும் தம்முள் மாறுபட்டபோது நான்த்தினைக் காக்க உயிரை விடுவார்களே தவிர, உயிரைக் காப்பாற்ற நாணத்தினை விட்டுவிட மாட்டார்கள். . பிறர்நானத் தக்கது தான்நானான் ஆயின் அறம்நானத் தக்கது உடைத்து. i{}18 பிறர் நாணமடையக் கூடிய பழியை ஒருவன் நாணமின்றிச் செய்வானாயின் அச்செயல் அவனைவிட்டு அறம் நீங்கிவிடுகின்ற குற்றத்தினை உடையதாகும். . குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாண் இன்மை நின்றக் கடை. 1019 ஒருவனுக்கு ஒழுக்கம் கெடுமாயின் அப்படிக் கெடுதல் அவனுடைய குடிப்பிறப்பொன்றினை மட்டுமே கெடுக்கும். அவன் நாணமின்றி இருப்பானானால், அது அவன் நலம்-நன்மைகள்-யrவற்றையும் கெடுக்கும். நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நானால் உயிர்மருட்டி யற்று. 102O மனத்தில் நாணமில்லாதவர்கள் உயிருடையார் போன்று வாழ்ந்து வருவது. மரத்தால் செய்யப்பட்ட மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் உயிருடையது போல் இயங்கிக் கொண்டு இருத்தல் போன்றதாகும்.