பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

208


திருக்குறளார் தெளிவுரை 208 i (3. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது:உம் விட்டேம் என்பார்க்கு நிலை. 1036 உழவர்களின் கை உழுதல் தொழிலைச் செய்யாது மடங்குமானால் யாவரும் விரும்பும் உணவையும் (யாம் துறந்தோம்) என்பார்க்கு அவ்வறத்திலேயே நிற்றலும் உளவாகாதாம். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். 1037 உழுபவன் நிலத்தின் ஒரு பலப்புழுதி காற்பலம் ஆகுமாறு அதனை உழுது காய விடுவானாகில் அந்நிலத்தில் விளையும் பயிர்ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் தழைத்து விளையும். . ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்று அதன் காப்பு. 1038 பயிர்க்கு உழுதலைவிட எருப்போடுதல் நல்லதாகும், களை எடுத்த பிறகு அப்பயிரினைக் காப்பாற்றுதல் நீர்ப்பாய்ச்சுதலைவிட நல்லதாகும். , செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். - 1039 நிலத்திற்கு உரியவன் நாள்தோறும் சென்று நிலத்தினைப் பார்த்துத் தக்கவை செய்யாதிருப்பானானால், அந்த நிலம் தமது மனைவியைப் போலத் தன்னுள்ளே வெறுத்து அவனுடன் பிணங்கிவிடும். இலம் என்று அசைஇ இருப்பாரைக் கானின் நிலம் என்னும் நல்லாள் நகும். 1040 'ஒன்றுமில்லாத வறியரானோம் என்று சொல்லிக்கொண்டு சோம்பலாக இருப்பவர்களைக் கண்டால் நிலமடந்தை என்று சொல்லப்படுகின்ற நல்ல பெண்ணானவள் தனக்குள்ளே சிரிப்பாள்.