பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

210



திருக்குறளார் தெளிவுரை 210 温0, நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். 1046 நல்ல நூல்களின் பொருள்களை நன்கு அறிந்துணர்ந்து சொன்னாலும் வறுமையில் இருப்பவரது சொல்லானது பொருள் இல்லாது பயனின்றிப் போகும். . அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். 104.7 அறத்தொடு பொருந்தாத வறுமையினையுடையவன் தன்னைப் பெற்றெடுத்த தாயாராலும் யாரோ ஒருவனைப் போல நோக்கப்படுவான். . இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. 1048 நேற்றும் கொன்றதைப் போன்று துன்பத்தினைச் செய்த நல்குரவு இன்றும் என்பால் வருகின்றதோ? வந்தால் யாது செய்வேன்? நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. 1049 ஒருவனுக்கு நெருப்பின்மேல் படுத்துத் துங்குதலும் முடியும்; வறுமை வந்துவிட்டபோது யாதொன்றினாலும் துங்குதல் முடியாததாகும். துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. - 1050 நுகரப்படும் பொருள்கள் எதுவும் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது முற்றத் துறத்தலேயாகும். அவ்வாறு செய்யாதிருத்தல், பிறர் வீட்டிலிருக்கும் உப்பிற்கும்,காடிக்கும் கூற்றுவனாக முடியும்.