பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

212



திருக்குறளார் தெளிவுரை $12 10. கரப்பு:இடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். 1056 உள்ளது மறைத்தலாகிய நோய் இல்லாதவர்களைக் கண்டால் மானம் விடாமல் இரப்பார்க்கு வறுமையால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக் கெடும். . இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து, j C57 தம்மை அவமதித்துப் பேசாமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்பவரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவக்கும் தன்மை உடையதாகும். . இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. - 1058 வறுமையுற்று இரப்பார் இல்லையானால் குளிர்ந்த இடத்தினையுடைய பெரிய ஞாலத்துள்ளார்களின் வாழ்க்கை, உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் சென்று வந்தது போன்றதாகும். ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேலார் இலாஅக் கடை. iO59 வறுமையாளர்கள் சென்று ஒன்றனை யாசித்துக் கொள்ள விரும்புதல் இல்லாதபோது கொடுப்பவரிடத்தில் என்ன புகழுண்டாகும்? ஒன்றும் இல்லை. | இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு:இடும்பை தானேயும் சாலும் கரி. i வறுமையால் இரப்பவன் கோபிக்காதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவன் இரத்தல் தொழில் செய்வதற்குக் காரணம் அக்கோபமே என்பது சான்றாக அமையும்.