பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

214



திருக்குறளார் தெளிவுரை 214 10. . ஆவிற்கு நீர்என்று இரப்பிலும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். #086 தண்ணீரின்றித் தவிக்கும் பகவிற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து கேட்கும் போதும், அவ்வாறு யாசிப்பதுபோல் ஒருவன் நாவிற்கு இழிவினைத் தருவது வேறில்லையாம். . இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற் கரப்பார் இரவன்மின் என்று. 1087 'நீங்கள் யாசிக்க வேண்டுமென்றால், உள்ளது மறைப்பவர்களிடம் யாசிக்காதிருங்கள்' என்று சொல்லி யாசிப்பவர்களிடமெல்லாம் யான் சென்று யாசிப்பேன். . இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். 1088 இரத்தல் என்னும்பாதுகாப்பில்லாத தோணி, மறைத்தல் என்னும் வன்னிலத்தில் தாக்குமாயின் பிளந்துபோகும். . இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளது.உம் இன்றிக் கெடும். 1069 உடையவர்களின் முன் வறியவாகள் நின்று யாசிக்கும் கொடுமையினை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகுகின்றது. உடையவர் இல்லையென்னும் கொடுமையினை நினைத்தால், உருகிய அளவும் இல்லாமல் அழிந்து விடும். - கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1070 உள்ளதை மறைத்து வைத்து இல்லை யென்றபோதே இரப்பார்க்கு உயிர்போகும் நிலையாகின்றது. இனி உள்ளதை மறைத்து இல்லை என்பவர்க்கு உயிர் போகாதிருத்தலால் அது எங்குச் சென்று மறைந்திருக்குமோ?