பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

216



திருக்குறளார் தெளிவுரை 215 10. அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1078 கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருள்களைப் போகும் இடமெல்லாம் தாங்கிக் கொண்டுபோய் மற்றவர்களுக்குச் சொல்லுதலால், அக்கயவர் அடிக்கப்படுகின்ற பறையினை ஒப்பராவர். ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூள்கையர் அல்லா தவர்க்கு. 1077 முறுக்கிய கையினால் தமது கன்னத்தினை நெரிப்பவர்க்கு அல்லாமல் கீழ்மக்கள்தாம் உணவு உண்டு பூசிய ஈரக் கையினையும் யாசிப்பவர்களுக்குத் தெறிக்க மாட்டார்கள். சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். 1078 மெலியார் தமது குறையினைச் சொல்லியவுடனேயே சான்றோர் பயன்படுவர்.மற்றைய கயவர் கரும்புபோல் நைய நெருக்கியபோதுதான் பயன்படுவர். உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகுங் கீழ் 1ΟΥg மற்றவர்கள் செல்வத்தால் நன்கு உடுத்திக்கொள்ளுவதையும் உண்ணுவதையும் கயவன் கண்டுவிட்டால், அவற்றைப் பொறாமல் அவர்மீது குற்றம் இல்லையென்றாலும் உண்டாக்கிச் சொல்வதில் வல்லவனாவான். எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. 1080 கயவர் தமக்கு யாதானுமொரு துன்பம் வந்தபோது தம்மைப் பிறர்க்கு விரைவாக விற்றற்கு உரியர், அதுவன்றி வேறு எத்தொழிலுக்கு உரியர்?