பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

8



திருக்குறளார் தெளிவுரை 8 6. அன்று அறிவாம் என்னாது அறம்செய்க. மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 கடைசிக் காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும். 7. அறத்தாறு இதுளன வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை, 37 அறத்தின் வழி (பயன்) இதுதான் என்று கேட்டறிய வேண்டுவதில்லை; பல்லக்கினைத் தூக்கிக் கொண்டு போகின்றவனையும் உள்ளே உட்கார்ந்து கொண்டு போகின்றவனையும் பார்க்கும் காட்சி அளவினாலேயே உணர்ந்து கொள்ளப்படும். 8. வீழ்நாள் படா.அமை நன்றாற்றின் அஃது.ஒருவன் வாழ்நாள் வழி அடைக்குங் கல். 38 அறம் செய்யாத நாளே இல்லாமல் ஒருவன் நடந்துகொள்ளுவானானால், அது அவன் மீண்டும் உடம்போடு பிறத்தல் என்னும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாகும். 9. அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த புகழும் இல. 39 அறச்செயல்களினால் வருவதுதான் உண்மையான இன்பமாகும். மற்ற முறைகளில் வருவனவெல்லாம் இன்பமும் அல்ல; புகழுடையனவும் ஆகா. 10. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி. 40 ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையன அறச்செயல்களே ஆகும். நீக்கவேண்டிய தன்மையுடையன தீயவைகளான செயல்களேயாகும்.