பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

222


திருக்குறளார் தெளிவுரை 22} 10. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். 1106 எனது உயிர் அவளைப் பெற்று அனுபவிக்குந்தோறும் தளிர்க்கும் வகையில் தீண்டுதலால் இப்பேதைப் பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டனவாகும். . தம்இல் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. 1107 அழகிய மாமை நிறத்தினையுடைய இப்பெண்ணினைத் தழுவும்போது தமது மனையிலிருந்து தமக்கு வந்த ப்ொருளைப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு மகிழ்வது போலிருக்கின்றது. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. 1 108 ஒரு பொழுதும் நெகிழாமையால் காற்று இடையில் புகாமல் தழுவுதல் ஒருவரையொருவர் விரும்புகின்ற இருவர்க்கும் இன்பம் தருவதாகும். . ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். 1109 புணர்ச்சி இனிமையாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீக்குதலும், பிறகு புணர்தலும் ஆகிய இவைதாம் திருமணம் செய்துகொண்டு காமத்தை இடைவிடாமல் எய்தியவர்கள் பெற்ற பயன்களாகும். அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. 1110 நூற்பொருள்களைக் கற்குந்தோறும் முன்னை அறியாமையினைக் கண்டாற்போல, சிறந் நத இழையினையுடையாளை இடைவிடாது செறியச் செறிய இவளிடம் புதுமை காணப்படுகிறது.