பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

களவு இயல்225


காமத்துப்பால் களவு இயல் 225 113. காதற் சிறப்பு உரைத்தல் (தலைமகனும் தலைமகளும் காதல் மிகுதியினைக் கூறல்) 1. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வால்னயிறு ஊறிய நீர், i. i21 மெல்லிய சொல்லினையுடையாளது வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலொடு தேனைக் கலந்த கலவை போன்றதாகும். 2. உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 排122 இப்பெண்ணுடன் எமக்கு உண்டான நட்பு, உடம்போடு உயிரிடை உண்டான நட்பு எத்தன்மையானதோ அத்தன்மையுடையதாகும். 3. கருமனியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். # 123 கண்களில் இருக்கும் கருமணிகளில் உள்ள பாவையே! நீ அங்கிருந்து போவாயாக! போகாதிருந்தால் எம்மால் காதலிக்கப்பட்ட அழகிய நுதலினையுடைய பெண்ணுக்கு இருக்க இடமில்லாமற் போகும். 4. வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள் நீங்கு மிடத்து. 1 124 ஆராய்ந்து அணியப் பெற்ற ஆபரணங்களையுடைய பெண், புணரும்போது உயிர் உடம்புடன் கூடிவாழ்தல்போல் இருக்கின்றாள். பிரியும் போது அந்த உயிர் அவ்வுடம்பிலிருந்து விலகிப் போவதுபோல் ஆகிவிடுகின்றாள். 5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பு:அறியேன் ஒள்அமர்க் கண்ணாள் குணம். 1125 ஒளிபொருந்தியதாய்ப் போர் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறப்பேனானால் நினைப்பேன். (ஆனால் நீான்) ஒருபோதும் மறத்தலையறியேன். ஆதலால், நினைத்தலையும் அறியேன்.