பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

226



திருக்குறளார் தெளிவுரை 225 10. கண்ணுள்ளில் போகார் இமைப்பின் பருவரார் நுண்ன்னியர்எம் காத லவர். 1126 எமது காதலர் எமது கண்ணுள்ளிருந்து போகமாட்டார்.அறியாமல் இமைத்தேனானாலும் அதனால் வருத்தப்படமாட்டார். ஆகையால் நுட்பமான தன்மையுடையவராவார். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து. 1127 காதலர் எப்போதும் எம் கண்ணில் உள்ளார். ஆதலால், எழுதுகின்ற அத்துணைக் காலமும் அவர் மறைவதனை அறிந்து, கண்ணினை மையினால் எழுதுவதும் செய்யமாட்டோம். நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. 1 428 எம் காதலர் எமது நெஞ்சிலேயே இருக்கின்றார். எனவே சூடான உணவை உண்டால் அவர் சூடுபட நேரும் என்றறிந்து சூடான உணவை உண்ண அஞ்சுகிறேன். . இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இல் ஆர். 1129 எனது கண்கள் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற என் காதலர் மறைதலையறிந்து இமைக்காமல் இருப்பேன். இமையாதிருப்பதைக் கண்ட இவ்வூர் மக்கள் அவரைத் துங்காத நோய் செய்தார் என்று கூறுகிறார்கள். உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இல் ஆர். 1130 காதலர் எக்காலத்திலும் என் உள்ளத்துள்ளே மனமகிழ்ந்து தங்கியிருக்கின்றார். அதனை அறியாமல் அவர் பிரிந்திருக்கின்றார் - அன்பில்லாதவர் - என்று இவ்வூர் சொல்லும்.