பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

228



திருக்குறளார் தெளிவுரை 228 8. 10. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண். 1136 என்னுடைய கண்கள் இப்பெண்ணின் காரணமாக ஒருபோதும் துயில் கொள்ளாமல் இருக்கின்றன. ஆகையினால் யாவரும் தூங்குகின்ற பாதி இரவிலும் யான் விழித்துக் கொண்டு மடலூர்தலையே நினைத்துக் கொண்டிருப்பேன். . கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணிற் பெருந்தக்கது இல், i 137 கடல்போல மிகுந்து வருகின்ற காமநோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாமல் பொறுத்திருக்கும் பெண் பிறப்புப் போல மிக்க சிறப்புடைய பிறப்பு வேறு எதுவும் இல்லை. . நிறைஅரியர் மன்அளியர் என்னாது காமம் மறைஇறந்து மன்று படும். i i 38 ‘இவர் நிறை குணத்தினால் நாம் செல்வதற்கு அருமையானவர்' என்று அஞ்சுதல் செய்யாமல் அன்பு காட்டத் தக்கவர் என்று இரக்கமும் கொள்ளாமல் மகளிர் காமம் அவர் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலர் அறிய மன்றத்தில் வெளிப்பட்டு விடுகின்றது. . அறிகிலார் எல்லாரும் என்றேளன் காமம் மறுகின் மறுகும் மருண்டு 1439 'யான் முன்பு அடங்கி இருந்ததால் எல்லாரும் என்னை அறியவில்லை'. இனி அவ்வாறின்றி யானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று கருதி என் காமம் இவ்வூர் வீதியின் கண்ணே மயங்கிச் சுழல்கின்றது. யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு, i 140 யாம் அடைந்த நோய்களை அறிவில்லாதவர்கள் அடையாமையினால் யாம் கண்ணாற் காணுமாறு எம்மைப் பார்த்து அவர்கள் நகைக்கின்றார்கள்.