பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

230



திருக்குறளார் தெளிவுரை &) 10. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. 1145 யாம் காதலரைக் கண்டது ஒரு நாளேயாகும். அதனால் உண்டாகிவிட்ட அலர் அந்த அளவின்றிக் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று எங்கும் பரவிவிட்டது. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். 1 + 47 இந்தக் காமநோயாகிய பயிரானது இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாகவும் அதுகேட்ட அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்கின்றது. . நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் துதுப்பேம் எனல். 1148 ஊர்மக்கள் எடுக்கின்ற அலரால் காமத்தினை அவித்துவிடுவோம் என்று எண்ணுதல் நெய்யால் எரியை அவித்து விடுவோம் என்றுஎண்ணுதற்குச் சமமாகும். . அலர்நான ஒல்லதோ அஞ்சல்ஒம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. i i 49 எம்மைக் கண்டபோது 'உம்மைப் பிரியேன் அஞ்சாதே என்று கூறியவர், தானே இன்று கண்டார் பலரும் நாணும் வகையில் பிரிந்திருப்பாராயின், நாம் அயலார் கூறும் அலருக்கு நாணுதல் கூடுமோ? தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்.இவ் ஆர். i 150 உடன் போவதற்குக் காரணமாக அலரை இவ்வூர்தானே எடுக்கின்றது. இனிக் காதலர் தாமும் யாம் விரும்பியபடியே செய்வர். அதனால் இந்த அலர் நமக்கு நன்மையாய் வந்தது.