பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்231



காமத்துப்பால் கற்பு இயல் 231 116. பிரிவு ஆற்றாமை (நாயகன் பிரிவும் நாயகியின் துயரமும்) 1. செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. 1 + 51 தாங்கள் எம்மைவிட்டுப் பிரியாதிருப்பதென்றால் அதனை எனக்குச் சொல்லுங்கள், பிரிந்துபோய் 'விரைவில் வருவேன்" என்பீரானால் அதனைத் தாங்கள் திரும்பி வரும்போது உயிர்வாழ்கின்றவர்களுக்குச் சொல்லுங்கள். 2. இன்கண் உடைத்துஅவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. 1 152 அவருடைய பார்வை மட்டும் நமக்கு இன்பம் தருவதாக இருக்கின்றது. அவர்.ால் புணர்ச்சி நிகழ, அது அவர் பிரிவார் என்ற அச்சத்தினை உடையதாக இருந்தது. 3. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவுஓர் இடத்துஉண்மை யான். i 153 'பிரியேன் என்று தான் சொன்னதையும் நமது பிரிவாற்றாமையினையும் அறிந்த காதலரிடத்தும் ஒரோவழி பிரிவு நிகழ்வதால் அவர் அன்புடையவர் என்று தெளிவது அரிதாக இருக்கின்றது. 1. அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. i 154 'உன்னைவிட்டுப் பிரியேன், அஞ்சாதே என்ற தலைவர், தாமே பிரிந்து செல்லுவாராயின் அவர் தெளிவித்த சொல்லை நம்பியவர் மேல் தவறு உண்டோ? . ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல் மற்று.அவர் நீங்கின் அரிதால் புணர்வு. 1155 எனது .யிர்போகாமல் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குரிய தலைவர் பிரிந்து செல்லாமல் நிறுத்துவாயாக, நிறுத்துவாரின்றி அவர் சென்றுவிட்டால் என்னுயிரும் செல்லும். பின்பு அவரைக் கூடுதல் முடியாததாகும்.