பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

232



திருக்குறளார் தெளிவுரை 232 10, , பிரிவுஉரைக்கும் வன்கண்ண ராயின் அரிது.அவர் நல்குவர் என்னும் நசை. 1158 தலைவர் முன்னின்று தம் பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையவராயின் அத்தன்மையர் பிறகு வந்து கூடி அன்பு செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படவேண்டியதாகும். . துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. 1157 தலைவர் என்னைப் பிரிந்து செல்லுகின்றார் என்பதனை அவர் உணர்த்தாமலேயே தாமே உணர்ந்து என் முன் கையினின்றும் கழலுகின்ற வளையல்கள் அறிவியாவோ? . இன்னாது இனன்இல்லூர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. i 158 பெண்களுக்குத் தம் குறிப்பு அறியும் துணையான தோழியர் இல்லாத வேற்றுரில் வாழ்வது துன்பம் செய்வதாகும். அதனைவிடத் தம் காதலரைப் பிரிதல் மேலும் துன்புத்தினைச் செய்வதாகும். தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ, 1159 தீயானது தன்னைத் தொட்டவரைத்தான் சுடும். காமமாகிய நோய்போலத் தன்னைவிட்டு நீங்கினால் சுடுகின்ற தன்மை உடையதோ? அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். 1160 பிரிவினைச் சொல்லுங்கால் அதற்கு உடன்பட்டுப் பிரியுங்கால் உண்டாகும் துன்பத்தினையும் தாங்கிக்கொண்டு, பிரிந்தபின்னர் பொறுத்திருந்து உயிர்வாழும் மகளிர் உலகத்தில் பலருண்டு,