பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

234



திருக்குறளார் தெளிவுரை 234 6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. 1 166 10. காமம் இன்பம் செய்கின்றபோது அந்த இன்பம் கடல் போலப் பெரிதாக இருக்கின்றது. அந்தக் காமம் பிரிவினால் துன்பம் செய்யுங்கால் அத்துன்பம் கடலினைவிடப் பெரிதாக இருக்கின்றது. . காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். 1 167 காமமாகிய கடலைக் கடந்து கரையினைக் காண முடியாதவளானேன். பாதி இரவிலும் யானே துணையின்றி இருக்கின்றேன். இறவாது இருக்கின்றேன். . மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா என்னல்லது இல்லை துணை. 1 468 இந்த இரவுப்பொழுது எல்லா உயிர்களையும் துயிலச் செய்வதால் துயிலாதிருக்கின்ற என்னையல்லாமல் வேறு துணையில்லாமல் இருக்கின்றது. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. 1 189 தலைவன் பிரிந்திருக்கும் இந்நாட்களில் இரவுப் பொழுதுகள் நெடியவாய்க் கழிகின்றன: தலைவன் செய்கின்ற கொடுமைகளைவிடக் கொடுமை செய்கின்றன. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோளன் கண். 1170 மனம்போலக் காதலருள்ள இடத்திற்குக் கடிதிற் செல்ல வல்லவையானால் என் கண்கள் இங்ங்ணம் வெள்ளமாகிய நீரை நீந்தாதிருக்கும்.