பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்235



காமத்துப்பால் கற்பு இயல் 235 118. கண்விதுப்பு அழிதல் (கண்கள் நாயகனைக் கான விரும்பி வருந்துதல்) 1. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. f : 71 இக்கண்கள் காதலரை எமக்குக் காட்டியதாலன்றோ இத்தணியா நோய் உண்டாயிற்று. அவ்வாறு செய்த கண்கள் இன்று அத்தலைவரை எம்மைக் காட்டச் சொல்லி அழுவது என் கருதி? 2. தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் டைதல் உழப்பது எவன். + 1172 பின்னே விளைவதனை ஆராய்ந்தறியாமல் அன்று காதலரை நோக்கிய கண்கள் இத்துன்பம் நம்மால்தானே வந்தது என்று பொறுத்திருப்பதை அறியாமல் வருத்தமுறுவது எதனைக் கருதி' 3. கதுமெனத் தாம்நோக்கி தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. 1173 இக்கண்கள் அன்று காதலரைத்தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்ற தன்மை நம்மால் சிரிக்கத் தக்கதாக இருக்கின்றது. 4. பெயல்ஆற்ற நீர்.லந்த உண்கண் உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. i 174 மையுண்ட கண்கள் நீக்க முடியாத காமநோயிலை என்னிடம் நிறுத்தித் தாமும் அழமுடியாதபடி நீர்வற்றி இருக்கின்றன. 5. படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தால் கண். 1175 கடலும் சிறிதாகி விடுமாறு பெரிதாகிய காம நோயினைச் செய்துவிட்ட எளது கண்கள் அத்தீமையான செயலர்ல் துக்கம் வராமல் துன்பத்தில் உழலுகின்றன.