பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

236



திருக்குறளார் தெளிவுரை 236 i{}. ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம் இதன்பட் டது. 11.78 எமக்கு இந்தக் காம நோயினை உண்டாக்கிய கண்கள் தாமும் துயில் கொள்ளாமல் அழுது கொண்டிருக்கின்றன. இது மிகவும் இனிமையாக இருப்பதாயிற்று . உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். 1177 மிகவும் விரும்பி மனம் நெகிழ்ந்துவிடாமல் அவரைக் கண்ட கண்கள் இன்று துயிலாமல் துன்பத்தில் உழன்று உழன்று உள்ளுக்குள் நீர் இன்றிப் போகட்டும். பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். 11.78 உள்ளத்தால் விரும்பாமல் வார்த்தைகளினால் மட்டும் விரும்பிய தலைவர் இவ்விடத்திலேயே இருக்கின்றார். அந்த உண்மையால் பயன் யாது? அவரைக் காணாமல் கண்களால் இருக்க முடியவில்லையே! வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். ! 179 காதலர் வராதபோது அவர் வரவு பார்த்துக் கண்கள் துயிலவில்லை; வந்தபோது பிரிவாரோ என்று அஞ்சித் துயிலவில்லை. ஆதலால் இரு நேரங்களிலும் கண்கள் துங்கமுடியாமல் துன்பத்தினை அடைந்தன. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறையறை கண்ணா ரகத்து. + 180 எம்மைப் போலும் அறையறையாகிய கண்களையுடையார் தம் மனத்தில் மறைத்து வைத்துள்ளதை இவ்வூரில் உள்ளார் அறிந்து கொள்ளுதல் எளிதாகும்.