பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்237



காமத்துப்பால் கற்பு இயல் 237 119. பசப்புறு பருவரல் (பிரிவுத் துன்பத்தால் உடம்பில் உண்டான நிற வேறுபாடு) 1. நயந்தவர்க்கு நல்காமை தேர்ந்தேன் பசந்தனன் பண்புயார்க்கு உரைக்கோ பிற. + 181 என்னிடம் நயந்து பேசிய தலைவர்க்குப் பிரிவை உடன்பட்டேன். அப் பிரிவினைப் பொறுக்காமல் இப்போது பசந்த எனது நிலையினை யார்க்குச் சொல்லுவேன்? 2. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு. 1182 இந்தப் பசப்பு நிறம், அவர் உண்டாக்கினார் என்கின்ற பெருமிதத்தால் என் உடம்பின்மீது ஊர்ந்து செல்லுகின்றது. 3. சாயலும் நானும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. 11.83 எனது தலைவர் பிரிந்தபோது காம நோயினையும் பசலை நிறத்தினையும் எனக்குத் தந்துவிட்டு எனது உடம்பின் அழகினையும் நாணத்தினையும் அவர் கொண்டு சென்றார். 4. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. 1184 அவர் சொன்ன வார்த்தைகளை நான் மனத்தால் நினைத்துக் கொண்டு இருப்பேன். வாயால் பேசுவதும் அவர் சிறப்பினையேயாகும். அப்படியிருக்க இப் பசப்பு வந்தது வஞ்சனையாக அல்லவோ இருக்கின்றது. 5. உலக்காண்எம் காதலர் செல்வார் இலக்காண்னன் மேனி பசப்பு:ஊர் வது. 1.185 அந்தக் காலத்தில் எமது காதலர் பிரிந்து சென்றார். என்மேனி பசப்பு நிறம் அடைவது இங்கேயன்றோ?