பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

238



திருக்குறளார் தெளிவுரை 238 6. 10. விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. 1186 விளக்கினுடைய மெலிவு பார்த்து நெருங்கி வருகின்ற இருட்டினைப் போன்று தலைவரது முயக்கத்தின் தளர்ச்சியினைப் பார்த்து இப்பசப்பு நிறம் நெருங்கி வருவதாயிற்று. -: புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1187 முன்னர் ஒருபோது காதலரைத் தழுவிக் கிடந்தேன். அறியாமல் சிறிது விலகிவிட்டேன். விலகிய அந்தப் பொழுதிலேயே பசப்பு நிறம் அள்ளிக் கொள்ளப்படுகின்ற பொருளினைப் போல வந்து நிறைந்துவிட்டது. . சந்தாள் இவள்ளன்பது அல்லால் இவளைத் துறந்தார்.அவர் என்பார் இல், 1.188 இவள் பொறுத்திருக்க முடியாமல் பசப்பு நிறம் அடைந்துவிட்டார் என்று என்னைப் பழிகூறுவதல்லாமல், இந்த நாயகியை அவர்விட்டுப்போய் விட்டார் என்று.அவரைக் குறைகூறுவார் ஒருவரும் இல்லை. . பசக்கமன் பட்டாங்குஎன் மேலf நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். 11.89 இந்தப் பிரிவைநான் உடன்படும் முறையில் சொன்ன தலைவர் நல்ல நிலையில் இருந்து வருவாரானால் என் உடம்பு பசப்பு நிறம் அடைந்தே இருக்கட்டும்: பசப்பெணப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். 1190 அன்று அன்புடன் கூடியதலைவரை அன்பில்லாதவரென்று பிறர் துற்றாமல் இருப்பார்களேயானால் பசப்பு அடைந்துவிட்டாள் என்ற பெயரினைப் பெறுதல் எனக்கு நல்லதேயாகும்.