பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்239



காமத்துப்பால் கற்பு இயல் 239 120. தனிப்படர் மிகுதி (பிரிவுத் துன்பத்தால் தலைவி மிகவும் துன்புறுதல்) 1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழ்இல் கணி. 1 19t தம்மால் விரும்பிக் காதலிக்கப்பட்ட தலைவரால் விரும்பப்பட்ட தலைவியர் காம அனுபவம் எனப்படும் வித்தில்லாத களியினைப் பெற்றவராவர். 2. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 1392 பிரிந்திருக்கும் கணவர் காலமறிந்து வந்துகாட்டும் பேரன்பு மகளிர்க்கு, தன்னையே நம்பி உயிர்வாழுகின்ற மக்களுக்குக் காலமறிந்து மலை அளவுடன் பெய்தது போன்றதாகும். 3. விழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. i 193 தாம் காதலிக்கும் தலைவரால் காதலிக்கப்படும் மகளிர்க்குப் பொருத்தமானது என்னவென்றால் காதலர் பிரிந்திருந்தாராயினும் நம்மை நினைத்து விரைவில் வருவார்; வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று இருக்கின்ற செருக்காகும். 4. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். 1 194 கற்பு நிறைந்த பெண்களால் நன்கு மதிக்கப்படும் தலைவியரும் தாம் விரும்பும் கணவரால் நன்கு விரும்பப்படா விட்டால் தீவினையுடையவர்களே ஆவார்கள். நன்மதிப்பைப் பெற்றிருந்தும் பயனடையாதவர்களே ஆவார்கள். 5. நாம்காதல் கொண்டார் நமக்குளவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் க.ை 1 195 காதலர் தாமும் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற்போனால் நம்முடைய காதலினைக்கொண்டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார்?