பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

240



திருக்குறளார் தெளிவுரை 240 6. 10. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. 1198. காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடித் தண்டின் பாரம் போல இரு பக்கமும் ஒத்திருந்தால் அது இனிமையானதாகும். . பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197 இன்பம் நுகர்வதற்குள்ள ஆண்பெண் இரு பாலரிடத்தும், சமமாக நிற்காமல். ஒருவரிடத்தில் மட்டும் நின்று துன்பம்செய்கின்ற காமன் என்னுடைய நோயினையும் மிகுந்த துன்பத்தினையும் அறியமாட்டானோ? வீழ்வாரின் இன்சொற் பெறஅது உலகத்து வாழ்வாரின் வன்கனார் இல். 11.98 தம்மால் காதலிக்கப்படும் தலைவரிடமிருந்து ஓர் இனியசொல்லையும் பெறாமல் இருந்து பிரிவினையைப் பொறுத்துக்கொண்டு வாழ்கின்ற பெண்கள் போல வன்கண்மையுடையார் இவ்வுலகில் இல்லை. . தசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. 1 199 என்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட காதலர் என்னிடம் அன்பில்லாதவரேயானாலும், அவரிடமிருந்து வருகின்ற எந்த ஒருசொல்லும் எனது செவிக்கு இனிமை தருவதாகும். உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200 உன்னுடன்பொருந்தாத தலைவர்க்கு உனது மிகுந்த நோயினைச் சொல்ல முயல்கின்ற நெஞ்சமே அது முடியாத செயலாகும். முடியாத அச்செயலை விட்டு, உனக்குத் துன்பம் செய்கின்ற கடலினைத் துர்க்க முயற்சிப்பாயாக; அது எளிமையானதாகும்.