பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்241



காமத்துப்பால் கற்பு இயல் 241 121. நினைந்தவர் புலம்பல் (பிரிவுக் காலத்தில் இன்பத்தினை நினைத்து வருந்துதல் 1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. 420.1 பிரிந்திருக்கும்போது முன்பு கூடிய இன்பத்தினை நினைத்தாலும் அது அப்போது பெற்றதுபோல இருக்கின்றது. ஆதலால் நினைத்தாலும் மகிழ்ச்சியைத் தரும் காமம், உண்டால் அல்லாமல் மகிழ்ச்சி செய்யாத கள்ளினை விட இன்பம் கொடுப்பதாகும். 2. எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதுஒன்று இல், 1202 தன்னுடைய அன்புக்குரிய காதலரைப் பிரிந்திருக்கும்போது நினைத்துக் கொண்டிருந்தால் நினைவார்க்குப் பிரிவினால் துன்பம் வருவது இல்லையாகும். 3. நினைப்பவர் போன்று நிளையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். 1203 எனக்குத் தும்மலானது வருவது போலிருந்து வராமல் போகின்றது.அதனால் காதலர் என்னை நினைப்பார்போல இருந்து நினைக்க ம்ாட்டர்ரோ? 4. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். 4204 எம்முடைய நெஞ்சத்தில் காதல்ர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்துகொண்டு இருக்கிறோமோ? 5. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஒவா வரல் 1205 காதலராகிய அவருடைய மனதில் யாம் இருக்கக் கூடாதென்று காவல் செய்கின்ற அவர் இம்முடைய நெஞ்சத்திற்குத் தவறாமல் வருவதற்கு வெட்கப்பட் மாட்டாரோ? -