பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

242



திருக்குறளார் தெளிவுரை 242 6. மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரோடுயான் உற்றநாள் உள்ள உளேன். i2O6 10, நான் அவருடன் இன்பம் நுகர்ந்த நாளினை நினைப்பதால் இத்துன்பக் காலத்திலும் உயிர்வாழ்கின்றேன். அவ்வாறு இல்லாமற் போனால் வேறு எப்படி உயிர்வாழ்ந்திருப்பேன்? , மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பு:அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். i2O7 முன்பு நுகர்ந்த இன்பத்தினைமறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரிவுத் துன்பம் எனது உள்ளத்தினைச் சுட்டு விடுகின்றது. அவ்வாறு இருக்க, அதனை மறந்தால் எவ்வாறு உயிர்வாழ்வேன்? எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு. 1208 தலைவரை யான் எத்துணை அதிகமாக நினைத்தாலும் அதற்கு அவர் கோபிக்கமாட்டார். அதனால் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பான இன்பம் அத்தகையதல்லவா? . விளியும்என் இன் உயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. 1209 'நாம் இருவரும் வேறல்ல" என்று சொன்ன காதலருடைய அன்பில்லாத தன்மையினை நினைத்து எனது இனிய உயிர் கழிந்து சென்று கொண்டிருக்கின்றது. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. - 1210 மதியே! எனது நெஞ்சத்தில் எப்போதும் இருந்துவிட்டுப்போன காதலரை யான் என் கண்ணினாலேனும் காணுகின்ற வரையில் நீ மறையாமல் இருப்பாயாக! நீ வாழ்வாயாக.