பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்243



காமத்துப்பால் கற்பு இயல் 243 122. கனவுநிலை உரைத்தல் (தலைவி தனது கனவினைப் பற்றிக் கூறுதல்) 1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. 12+ 1 காதலர் அனுப்பிய துதினைக் கொண்டு என்னிடம் வந்த கனவினுக்கு யான் விருந்தாக யாதினைச் செய்வேன்? 2. கயலுண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். 1212 கயல்போன்ற எனது மையுண்ட கண்கள் துங்குமானால்கனவில் காதலரைக் காண்பேன். கண்டால் அவருக்கு யான் பொறுத்துக் கொண்டிருக்கும் நிலைமையினைக் கூறுவேன். 3. நனவினான் நல்கா தவரைக் கனவினான் காண்டலின் உண்டுஎன் உயிர். 1213 நனவில் வந்து அன்பு செய்யாதிருக்கும் கணவரை யான் கனவில் கண்ட காட்சியாலே என்னுடைய உயிர் இருந்து வருகின்றது. 4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தாற்கு. 1214 நனவுக் காலத்தில் வந்து அன்பு காட்டாத எனது தலைவரை அவர் சென்ற இடத்திலிருந்து இங்குக் கொணர்ந்து காட்டுவதால் கனவில் காமமானது உண்டாகின்றது. 5. நனவினான் கண்டதுTஉம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இலளிது. 1215 நனவுப் பொழுதில் அவரைக் கண்டு நுகர்ந்த காம இன்பம் தானும் அப்போது இனிதாக இருந்தது. இப்போது நான் கனவில் கண்டு நுகர்ந்த இன்பமும் அது கண்டபோதே இனிதாகத்தான் இருந்தது எனக்கு இரண்டும் ஒத்திருந்தன.