பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

244



திருக்குறளார் தெளிவுரை 244 6, iQ. நனவுஎன ஒன்றுஇல்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். 1218 நனவு என்று சொல்லப்படுகின்றஒரு பாவி இல்லையாயின் கனவிலே வந்துகூடிய காதலர் என்னைப் பிரியார். தனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்எம்மைப் பிழிப் பது. 1217 ஒருபொழுதும் நனவிலே வந்து அன்பு செய்யாத கொடிய காதலர் நாள்தோறும் கனவில் வந்து நம்மை வருத்துவது எந்தப் பொருத்தம் பற்றியோ? துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. 1218 எனது நெஞ்சில் விடாமல் இருக்கும்காதலர் யான் துங்கும்போது வந்து என் தோள் மேலராய் இருக்கின்றார். பிறகு நான் விழித்துக் கொள்ளும்போது விரைந்து எனது பழைய நெஞ்சினிடத்துச் சென்று விடுகின்றார். . நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் கானா தவர். - 1219 தமக்கு ஒரு காதலர் இல்லாமையால், அவரைக் கனவில் கண்டறியாத மகளிர், தாம் அறிய நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை அன்பிலர் என்று நொந்து கொள்ளுகின்றனர். நனவினான் நம்நீத்தார் என்பர் கனவிலான் காணார்கொல் இவ்வூ சவர். 1220 இவ்வூர் மகளிர் நனவிலே நம்மைவிட்டுப் போனார் என்று நம் காதலரைக் கொடுமை.கூறுகிறார்கள். அவர் கனவில் நீங்காது வருவதனைக் கண்டறியாரோ?