பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்247



காமத்துப்பால் கற்பு இயல் 247 124. உறுப்பு நலன் அழிதல் (பிரிவுத் துன்பத்தினால் தலைவியின் உறுப்புக்கள் அழகிழத்தல்) 1. சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். 1231 பிரிவினால் பொறுத்திருக்க முடியாத துன்பத்தினை நமக்கு உண்டாக்கி நெடுந்துரம் சென்ற காதலரை நினைத்து, அழுவதால் கண்கள் ஒளியிழந்து முன்பு தமக்கு நாணமுற்ற மலர்களுக்கு இன்று தாம் நாணிவிட்டன. 2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பணிவாரும் கண். 1232 பசப்பு நிறமடைந்து நீர் பொழிகின்ற கண்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பில்லாத் தன்மையினைப் பிறர்க்குச் சொல்லுவனபோல் இருக்கின்றன. 3. தணந்தமை சால அறிவிப்பு போலும் மணந்தநாள் வீங்கிய தோள். $ 233 காதலர் மணந்தபோது இன்ப மிகுதியால் பூரித்த தோள்கள் இன்று அவர் பிரிந்தமையினை விளங்க உணர்த்துவது போன்று மெலிந்துவிட்டன. 4. பனைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். 1234 துணைவர் நீங்கியதால் அவரால் பெற்ற செயற்கையேயன்றி இயற்கையழகும் இழந்த தோள்கள்.இன்று அதற்கு மேலேதம் பெருமை இழந்து வளையல்கள் கழல நிற்கின்றன. 5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். 1235 வளையல்களும் கழன்று. பழைய இயற்கையழகும் இழந்த இத்தோள்கள், கொடிய தலைவரது கொடுமையினைத் தாமே எடுத்துக் கூறுகின்றன.