பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

248



திருக்குறளார் தெளிவுரை 248 6. 10. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. 1236 வளையல்கள் கழலுமாறுதோள்கள் மெலிந்ததால் அவரைப் பிறர் கொடியர் எனக் கூறுதலைப் பொறுக்க முடியாமல் யான் என்னுள்ளே நொந்து நிற்கின்றேன். பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து. #23? நெஞ்சே! இவர் கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலரிடம் சென்று என் மெலிந்த தோள்கள் செய்யும் ஆரவாரத்தினைக் கூறி ஒரு மேம்பாடு அடையமாட்டாயோ? அப்படிச் செய்தால் சிறந்ததாகும். முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது டைந்தொடிப் பேதை நுதல். 1238 தன்னை இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோகும் என்று கருதி ஒரு போது நான் தளர்த்தினேன். அதனையும் கூடப் பொறுக்கமுடியாமல் பசிய வளையவல்களையணிந்த இப்பேதையினுடைய நுதல் பசலை நிறம் அடைந்தது. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். 1239 இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்தியதால் இருவருக்குமிடையே சிறு காற்று நுழைந்தது. அந்தச் சிறிய இடைவெளியினையும் பொறுக்க முடியாமல் இப்பேதையினுடைய குளிர்ச்சி பொருந்திய கண்கள் பசப்பு நிறம் அடைந்தன. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்து கண்டு, 1240 தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய நெற்றியடைந்த பசப்பு நிறத்தினைக் கண்டு கண்களின் பசப்பு நிறம் துன்பத்தினை அடைந்து விட்டது.