பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்249



காமத்துப்பால் கற்பு இயல் 249 125. நெஞ்சொடு கிளத்தல் (தலைவி இன்னது செய்வதென்று அறியாமல் நெஞ்சொடு பேசுதல்) 1. நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241 நெஞ்சமே தீராத இக்காம நோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றினை யான் அறியுமாறு யாதானுமொன்றனை நினைத்துச் சொல்லுவாயாக. 2. காதல் அவர்இல ராகநீ நோவது பேதைமை வாழிளன் நெஞ்சு. 1242 என்னுடைய நெஞ்சமே நம்முடைய கணவர் நம்மிடத்தில் காதல் கொள்ளாமல் இருக்கின்றார். நீ அவர் வரவு நோக்கி வருந்துகின்றாய்; இது உன்னுடைய பேதைமையேயாகும். 3. இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துஉள்ளல் டைதல்நோய் செய்தார்கண் இல், 1243 இத்துன்ப நோயினைச்செய்தவரிடத்தில் நம்மிடம் இரக்கங்காட்டி வருகின்ற எண்ணம் இல்லையே! நெஞ்சமே நீ அவர் இருக்கும் இடத்திற்குப் போகாமல் இங்கேயே இருந்துகொண்டு அவர் வரவு நோக்கி வருந்துவது ஏன்? 4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் தின்னும்அவர்க்காணல் உற்று. 1244 தலைவரைக் காணவேண்டுமென்று கண்கள் என்னைத் தின்பனபோன்று வருத்தி நிற்கின்றன. நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது இக்கண்களையும் உடன்கொண்டு செல்லுவாயாக. - 5. செற்றர் எனக்கை விடல் உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். 1245 நெஞ்சமே நாம் அன்பு கொண்டு அவரைக் காதலித்திருக்க, நம்பால் காதல் கொள்ளாதிருக்கும் அவரை வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலிமை நமக்கு உண்டோ?