பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

250



திருக்குறளார் தெளிவுரை 250 10, கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய் பொய்க்காய்வு காய்தி.என் நெஞ்சு. $ 248 என் நெஞ்சமே நாம் பிணங்கிக் கொண்டு புலந்திருந்தால் கலவியிாைலே நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் புலந்து பின் நீங்காத நீ இப்போது பொய்யாகக் கோபித்துக் கொண்டிருக்கின்றாய். . காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே யானோ பொறேன்.இவ் விரண்டு. 1247 நல்ல நெஞ்சமே நாணத்தினை விடமுடியவில்லையென்றால் ஒன்று காமத்தினை விடு; அல்லது நாணத்தினை விட்டுவிடு; இல்லையாயிடின் இரண்டினையும் தாங்கும் வலிமை எனக்கு இல்லை. . பரிந்தவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248 எனதுநெஞ்சமே தலைவர் பொறுத்திருக்க முடியாத நமது தன்மையினை அறியாததால் மனம் நொத்து வந்து அன்பு செய்யாமல் இருக்கின்றார்; அப்படி நினைத்து ஏங்கிப் பிரிந்திருக்கும் அவர் பின்னே ஏங்கிச் செல்ல நினைக்கின்ற நீ எதையும் தெரிந்து கொள்ளமாட்டாய். உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு. 1249 என் நெஞ்சமே காதலர் உள்ளத்திலேயே இருக்கின்றார். இப்போது வெளியில் போய்த் தேடி யாரிடம் செல்கின்றாய்? துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். 1250 நம்மைக் கூடாவண்ணம் விட்டுப்போன தலைவரை. நாம் நம் மனத்திலேயே வைத்திருப்பதால் முன்பு இழந்த புறத்து அழயேயன்றி மனத்து அழகினையும் இழப்போம்.