பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்251



காமத்துப்பால் கற்பு இயல் 251 126. நிறை அழிதல் (மனத்தில் மறைத்து வைத்திருப்பதை வேட்கை மிகுதியால் வெளிப்பட வைத்தல்) 1. காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நாணத்தாள் நானுத்தாள் வீழ்த்த கதவு. # 35i நாண் என்னும் தாழ்ப்பாளினைக் கோத்த நிறையென்னும் கதவினைக் காம வேட்கையாகிய கணிச்சி முறிக்கின்றது. அதனை நிறுத்தித் தடுக்க முடியவில்லை. 2. காமம் எனஒன்றோ கண்ணின்று என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் 1252 எல்லோரும் துங்குகின்ற பாதி இரவிலும் எனது நெஞ்சத்தினைத் தொழிற்படுத்தி ஆட்சி செய்கின்றது; ஆதலால் காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று இரக்கமில்லாததாக இருக்கின்றது. 3. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு:இன்றித் தும்மல்போல் தோன்றி விடும் i 253 இக்காமத்தை நான் என்னுள்ளே மறைக்கக் கருதுகின்றேன். ஆனால், இஃது என் கருத்திற்குள் அடங்காமல் தும்மல்போல் வெளிப்பட்டு விடுகின்றது. 4. நிறையுடையேன் என்பேன்மன் யானோளன் காமம் மறைஇறந்து மன்று படும். 1254 யான் முன்பெல்லாம் என்னை நிறையுடையேன் என்று நினைத்திருந்தேன் இன்று என் காமம் மறைத்து வைத்திருந்ததையும் கடந்து மன்றத்தில் பலரும் அறிய வெளிப்படுகின்றது. 5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. 1255 தம்மைவிட்டுச் சென்றவர் பின்னே செல்லாமம் தாமும் அகன்று நிற்கும் பெருந்தகைமை காமநோயினை உணர்ந்தவர்கள் அறிவது ஒன்று அன்று.