பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

252



திருக்குறளார் தெளிவுரை &战 İÖ. . செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றுஎன்னை உற்ற துயர். 1256 என்னைவிட்டுப் பிரிந்தவர் பின்னே யான் செல்லுவதை விரும்புவதால், எனக்கு உற்ற துயர் எத்தன்மையானது மிகவும் நல்லதேயாகும். நாண் என ஒன்றோ அறியலம் காமத்தால் பெணியார் பெட்ட செயின். 1257 நம்மால் விரும்பப்பட்ட தலைவர் திரும்ப வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுங்கால் நாணம் என்ற ஒன்றினையும் அறிய முடியாதவராக இருந்தோம். . பல்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. Í 258 பல பொய்களையும் சொல்ல வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களல்லவா நம்முடைய நிறை , குணமாகிய கோட்டையினை அழிக்கின்ற படையாகும். புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. i259 அவர் வந்தபோது பிணங்கவேண்டும் என்று எண்ணி முன்னே நிற்காமல் பிறிதோர் இடத்திற்குச் சென்றேன். எனது நெஞ்சம் நிறைகுணத்தில் நிற்காமல் அவரோடு கலத்தல் தொடங்குவதையறிந்து புல்லினேன். நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல், 1260 தீயிலிடப்பட்ட கொழுப்பானது எவ்வாறு உருகுமோ அதுபோன்ற நெஞ்சினையுடைய மகளிர்க்கு அவர் புணர, யாம் ஊடிப்பின்பு புணராது அந்நிலைமையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? உண்டாகாது: