பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்253



காமத்துப்பால் கற்பு இயல் 253 127. அவர்வயின் விதும்பல் (பிரிந்திருக்கும் இருவரும் வேட்கை மிகுதியால் ஒருவரையொருவர் காண விழைதல்) 1. வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல். 1261 அவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் இழைத்து வைத்து அவைகளைத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்தன.அவர் வருகின்ற வழிபார்த்து எனது கண்களும் ஒளியிழந்து போயின. 2. இலங்கிழாய் இன்று மறப்பின்னன் தோள்மேல் கலங்கழியும் காளிகை நீத்து. 1282 விளங்குகின்ற அணிகலன்களையுடையவளே. இன்று காதலரை யான் மறப்பேனாயின் மேலும் அழகு என்னை விட்டு நீங்க என் தோள்வளையல்கள் கழலும். 3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்சென்றார் வரன்நசைஇ இன்னும் உளேன். 1283 இன்பம் நுகர்தலை விரும்பாமல் வேறு ஒன்றனை விரும்பித் தமது மனவெழுச்சியாகிய ஊக்கமே துணையாகச் சென்றவர் அவற்றை இகழ்ந்து இங்கு வருதலை விரும்புவதால் யாம் இன்னும் உயிரோடிருக்கிறோம். 4. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளித் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. 1264 நம்மைப் பிரிந்து போனவர் காமத்துடனே நம்மிடம் வருதல் நினைத்து எனது நெஞ்சம் வருத்தம் நீங்கி மேன்மேலும் பணைத்து எழுகின்றது. - 5. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டயின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. 1285 எனது கண்களின் ஆவல் தீரும் வகையில் எனது கொண்கனைக் காண்பேனாக, அங்ங்னம் கண்டபின் மெல்லிய தோளிலே உள்ள பசப்பு தானாகவே நீங்கும்.