பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்257



காமத்துப்பால் கற்பு இயல் 257 129. புணர்ச்சி விதும்பல் (இருவரும் புணர்ச்சிக்கண்னே விரைதல்) 1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. 1281 நினைத்த பொழுதே களிப்படைதலும் கண்டவுடனே மகிழ்ச்சியுறுதலும் கள்ளுண்பார்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு. 2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். 1282 மகளிர்க்குக் காமம் பனையளவினைவிட மிகுதியாக உண்டாகிவிடுமானால் அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படுவதாகும். 3. பேணாது பெட்டவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். 1283 நம்மை விரும்பாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும் தலைவனை எனது கண்கள் பார்க்காமல் இருக்கமாட்டா. 4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது.என் நெஞ்சு. 1284 தோழி! காதலரிடம் பிணங்கிக் கொள்வதற்காகச் சென்றேன். காதலரைக் கண்டதும் எனது நெஞ்சம் ஊடலினை மறந்துவிட்டு அவருடன் கூடுவதற்குச் சென்றுவிட்டது. 5. எழுதுங்கால் கோல்கானாக் கண்ணேபோல் கொண்கள் பழிகாணேன் கண்ட விடத்து. 1285 கண்களுக்கு மையெழுதும்போது அஞ்சனக் கோலின் இயல்பினைக் காண முடியாத கண்ணேபோல, கணவனை நேரில் கண்டபோது அவரது தவறுகளைக் காணமாட்டேன்