பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

258



திருக்குறளார் தெளிவுரை 258 8. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. 1288 காதலரைக் காணுகின்றபோது அவரது தவறுகளைக் கான முடியாதவளாகின்றேன். அவரைக் காணாத போது தவறுகள் அல்லாமல் பிறவற்றைக் காண்கின்றிலேன். 7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்துஎன் புலந்து. 1287 தம்மை இழுத்துக் கொண்டு போவதை யறிந்தும் தண்ணீரில் பாய்பவர்போலப் பிணங்குவதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தும் கணவரோடு பிணங்கிப் பெறுவது என்ன? 8. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்.அற்றே கள்வநின் மார்பு. 1288 வஞ்சகா தன்னை உண்டு களித்தார்க்கு அவமானப்படத்தக்க துன்பத்தினைச் செய்தாலும் அவரால் மேன்மேலும் விரும்பப்படுகின்ற கள்ளினைப்போல எங்கட்கு நினது மார்பு உள்ளது. 9. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். 1289 காம இன்பம் மலரைவிட மெல்லியதாக இருக்கும். அவ்வாறு அந்த மென்மைத் தன்மையின் பக்குவத்தினை அறிந்து அதனைப் பெறுபவர் உலகத்தில் சிலரேயாவர். 10. கண்ணில் துணித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப்பு உற்று. 1290 காதலி முன்னொரு முறை கண்ணினால் மட்டும் ஊடுதல் செய்து தழுவுதலில் என்னைவிட விருப்பங்கொண்டு அந்த ஊடலினையும் மறந்து அப்போதே கூடிவிட்டாள்.