பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்259



காமத்துப்பால் கற்பு இயல் 259 130. நெஞ்சொடு புலத்தல் (புணர்ச்சி விரும்புகின்ற நெஞ்சுடனே இருவரும் புலத்தல் என்பதாகும்) 1. அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. 1291 நெஞ்சமே அவருடைய நெஞ்சு நம்மை நினைக்காமல் அவருக்காகவே இருப்பதைக் கண்டும் நீ எமக்காக இருக்காமல் அவரை நினைத்தற்குக் காரணம் யாது? 2. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் - செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு. 1292 என் நெஞ்சே! நம்மிடம் அன்புடையவர் ஆகாதவரை உள்ளவாறு அறிந்திருந்தும் நாம் சென்றால் அவர் கோபிக்கமாட்டார் என்றுகருதி அவரிடம் செல்லுகின்றாய்! என்னே அறியாமை? 3. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். 1293 நெஞ்சமே! நீ விரும்பியவாறே அவரிடம் செல்லுவதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு நட்புற்றவர்கள் உலகத்தில் இல்லை என்கின்ற நினைப்போ? 4. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துணிசெய்து துல்வாய்காண் மற்று. 1294. நெஞ்சமே! நீ அவரைக் கண்டபோது இன்பம் நுகரக் கருதுவதல்லது அவரைக் கண்டதும் புலவியை உண்டாக்கிப் பின்துகரக் கருதாய், அபபடிப்பட்ட உன்னுடன் இனி எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். 5. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு, 1295 காதலரைப் பெறாத.ே து அவ்வாறு பெறாதிருப்பதற்கு அஞ்சுகின்றது. அவ,ை பெற்றால் பிரிவாரோ என்பதை நினைத்து அஞ்சுகின்றது. ஆதலால் எனது நெஞ்சம் எப்போதும் நீங்காத துன்பத்தினை உடையதாக இருக்கின்றது.