பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

260



திருக்குறளார் தெளிவுரை 260 iO. தனியே யிருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. 1296 எனது மனமானது இங்கே இருந்துகொண்டு காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளைத் தன்னுடன் சேர்ந்து நினைக்கும்போது என்னைத் தின்பது போன்ற துன்பத்தைச் செய்வதாகின்றது. நானும் மறந்தேன் அவர்மறக் கல்லாளன் மாணா மடநெஞ்சில் பட்டு. 1297 தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத எனது மாட்சிமையில்லாத மட நெஞ்சுடனே கூடி, என் உயிரினும் சிறந்த நாணத்தினையும் மறந்துவிட்டேன். . எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு 1298 உயிரின்மீது காதலையுடைய எனது நெஞ்சு நம்மை ஏளனம் செய்து சென்றார் என்று நாமும் ஏளனம் செய்வோமாயின், பின் நமக்கே இழிவாகும் என்று எண்ணி அவர் திறத்தினையே நினைத்துக் கொண்டிருக்கின்றது. துன்பத்திற்கு யாரோ துணையாவார் தாம்உடைய நெஞ்சம் துணைஅல் வழி. 1299 ஒருவருக்குத் துன்பம் வந்தபோது அதனை நீக்குவதற்கு உரிமையான தமது நெஞ்சமே துணையாகாதபோது வேறு துணையாவார் ஒருவரும் இல்லை. தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய நெஞ்சம் தமர்அல் வழி. 1300 ஒருவருக்குத் துன்பம் வந்துற்றபோது உரித்தாகப் பெற்ற நெஞ்சம் தம்மவராகாதிருந்தால், அயலார் தம்மவராகாதிருத்தலைச் சொல்ல வேண்டுமோ?