பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்261



காமத்துப்பால் கற்பு இயல் 261 131. புலவி (ஒருவரோடு ஒருவர் பிணங்கிக் கொள்ளுதல்) 1. புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது 1301 புலந்து கொண்டிருந்தால் காதலர் அடையும் வேதனையைச் சிறிது காண முடியும். ஆதலால் நீ விரைந்து சென்று அவரைத் தழுவாமல் புலந்து (பிணங்கிக்) கொண்டிருப்பாயாக. 2. உப்புஅமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். 1302 கலவியின்பத்திற்குப் புலவியானது உண்ணும் பண்டங்களுக்குச் சுவை தரும் உப்பின் அளவு போன்றதாகும். இனி அதனை அளவின்றிச் சிறிது மிக விடுதல் உப்பு அளவின் மிகுந்துவிட்டது போன்றதாகும். 3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் ജ്ഞഥ. புலந்தாரைப் புல்லா விடல். i 303 தம்மைப் பெறாமல் புலந்து கொண்டிருக்கும் மகளிரை, அப்புலவி நீக்கி ஆடவர் கலவாதிருத்தல் முன்னமேயே துன்புற்று அலந்தாரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கினது போன்றதாகும். 4. ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று. 1304 தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும். 5. நலத்தகை நல்லவர்க்கு ஏனர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து. 1305 நற்குணங்களால் தகுதியுடையவரான தலைவர்க்கு அழகாவது என்ன்வென்றால், பூப்போன்ற கண்ணினை யுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவி மிகுதியேயாகும். 18