பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

262



or திருக்குறளார் தெளிவுரை 262 6. 10. துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. 1308 முதிர்ந்த பிணக்காகிய துனியும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லையானால், காமம் அதிகமாகப் பழுத்துவிட்ட கனியும் இளங்காயும் போன்றதாகும். . ஊடலின் உண்டு ஆங்குஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று 1307 புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று எண்ணுவதால் இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலினும் உண்டாவதொரு துன்பம் இருக்கின்றது. நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும் காதலர் இல்லா வழி. i808 நம்பொருட்டு வேதனையுற்றார் என்று அந்த வேதனையினை அறியும் அன்பில்லாத காதலரைப் பெறாதபோது, ஒருவர் நொந்து கொள்ளுவதால் பயன் என்ன? . நீரும் நிழலது இனிதே புலவியும் விழுநர் கண்ணே இனிது. 1309 உயிருக்கு இன்றியமையாத நீரும் நிழலினிடத்தே இனிதாகும். வெயிலில் இனிதாகாது. அதுபோலப் புணர்ச்சிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையவரிடத்தில்தான் இனிதாகும். ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. 1310 தான் ஊடலினால் மெலிந்து நிற்கவும் விட்டிருக்க வல்லவரான காதலருடன் கூடக்கடவோம் என்று எனது நெஞ்சம் முயலுதற்குக் காரணம் தனது ஆசையேயாகும்.