பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்263



காமத்துப்பால் கற்பு இயல் 263 132. புலவி நுணுக்கம் (பஞ்சனையில் வீற்றிருந்து பேசும் நுணுக்கம்) 1. பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்னேன் பரத்தநின் மார்பு. 1311 பரத்தமையுடையவனே, பெண் தன்மையுடையார் அனைவரும் உன்னைக் கண்ணால் பொதுவாக உண்பர். ஆதலால் உன்னுடைய மார்பினைப் பொருந்தேன். 2. ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து 1312 யாம் காதலரோடு ஊடுதல் செய்து உரையாடிக் கொண்டிருந்தபோது அது நீக்கித் தம்மை நீடுவாழ்கவென்று கூறுவோம் எனக் கருதிக் காதலர் தும்மினார். 3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினர் என்று 1313 வளைவாகிய பூமாலையைச் சூடிக் கொண்டிருந்தேனாயினும் உம்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்குக் காட்டவேண்டியே சூடினிர் என்று தலைவி கோபித்துக் கொள்ளுவாள். 4. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. $31.4 காமம் அனுபவத்தற்குரிய இருவருள்ளும் "யாம் மிக்க காதலுடையோம்' எனக்கருதி, "யாரினும் காதலம்' என்று கூறினேன். அப்படி நினைக்காமல் 'என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் அதிகக் காதலுடையேம்" என்று கூறினேன் என்பதாகக் கருதி அவள் ஊடிக்கொண்டாள். 5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர் கொண்டனள். 1315 காதல் மிகுதியால் இப்பிறப்பில் பிரியேன் என்று கூறினேன். அதனால் மறுபிறப்பில் பிரிவேன் என்று குறித்ததாகக் கருதி, தன்னுடைய கண்களில் நிறைந்த நீரினைக் கொண்டாள்.