பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

264



திருக்குறளார் தெளிவுரை 364 6. 10. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றுஎன்னைப் புல்லாள் புலத்தக் கனள். 1318 பிரிந்திருந்தபோது உன்னையே இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருந்தேன் என்னும் கருத்தால் உள்ளினேன் என்று கூறினேன். அதற்கு, மறந்திருந்துதானே நினைத்தீர்' என்று கூறித் தழுவுவதற்கு இருந்தவள் பிணங்கிக் கொண்டாள். வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள் யார்உள்ளித் தும்மினி என்று. 1317 கூடி இருந்தவள் நான் தும்மினபோது இயல்பாக வாழ்த்தினாள். வாழ்த்தியவுடனே 'உம்மை நின்ைத்து வருந்துகின்ற பெண்களுள் யாவர் நினைத்தலால் தும்மினீர் என்று புலந்து அழுதாள். , தும்முச் செறுப்பு அழுதாள் துமர்உள்ளல் எம்மை மறைத்தீரோ என்று. 1318 எனக்குத் தும்மல் வந்தபோது அதனை யான் அடக்கினேன். அவள். 'உன்னுடைய காதலியர் உம்மை நினைப்பதை யான் அறியாதபடி மறைக்கின்றீரோ என்று சொல்லிப் புலந்து அழுதாள். தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. 1319 இவ்வாறு ஊடுதல் செய்கின்றாளே என்று யான் பணிந்து என்னை உணர்த்தினேன். அப்போதும், பிற பெண்கள் ஊடுதல் செய்யும்போதும் இப்படித்தான் பணிதல் தன்மையுடையவரோ என்று சொல்லிக் கோபித்துக் கொண்டாள். நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று. . 1320 என் சொற்களுக்கும் செயல்களுக்கும் அவள் கோபிப்பதால் நான் பேசாமல், அவளுடைய உறுப்புக்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய உறுப்புக்களை வேறு பெண்களின் உறுப்புக்களுடன் ஒப்பிட்டு நோக்கீனிர் என்று கூறிக் கோபித்துக் கொண்டாள்.