பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்17



அறத்துப்பால் இல்லற இயல் 17 9. விருந்தோம்பல் (விருந்தினர் பெருமையும், விருந்தோம்பலின் சிறப்பும், 4 பயனும்) இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 இல்வாழ்க்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்தற் பொருட்டேயாகும். விருந்து புறத்ததாத் தான்.உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. 82 வந்த விருந்தினரை இல்லத்தின் புறத்தே இருக்கவைத்துச் சாவினைத் தராத மருந்தாக இருந்தாலும், தான் மட்டும் சாப்பிடுதல் முறைமையுடையதாகாது. வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 83 வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றுபவனுடைய இல்வாழ்க்கையானது வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லையாகும். அகனமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல், 84 முகமலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில் திருமகள் மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள். வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 85 மிச்சில் மிசைவான் புலம். விருந்தினரைப் போற்றி உபசரித்து மீதியாக இருப்பதை 'உண்பவன் நிலத்திற்கு விதை இடுதலும் வேண்டுமோ? விதைக்கு (விதைக்க) - வைத்திருப்பதையும் சமைத்து உணவளிப்பான் என்பதாம்.