பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

18



திருக்குறளார் தெளிவுரை 18 6. 10, செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. 86 வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து அனுப்பி வைத்து, வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவருடன் உண்ண இருப்பவன் வானத்தவர்க்கு நல்ல விருந்தினனாவான். துணைத்துணை வேள்விப் பயன். இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின் 87 விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்ற அளவினை உடையதில்லை. அது விருந்தினரின் தகுதி அளவினையே அளவாகக் கொண்டதாகும். பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். 88 நல்ல விருந்தினரைப் பேணி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள், பொருளைக் காப்பாற்றி இழந்து இதுபோது பற்றுக்கோடு இல்லையானோம், என்று இரக்கப்பட்டு வருந்துவர். - உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு. 89 பொருள் பெற்றிருந்தும் வறுமை இருப்பது என்பது என்னவென்றால், விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும். அத்தன்மை, அறிவில்லாதவர்களிடத்தில் காணப்படுவதாகும். மோப்பக் குழையும் அனிச்சம், முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 90 அனிச்ச மலரானது மூக்கில் வைத்து மோந்தால்தான் வாடுவதாகும். விருந்தினர்கள், முகமானது வேறுபட்டுப் பார்க்கும்போதே வாடிவிடுவர். .