பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

20



திருக்குறளார் தெளிவுரை 20 6, 10. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின், 98 பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானானால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து வளரும், . நயன்ான்று நன்றி பயக்கும் பயன்ான்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97 நற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும். . சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். 98 பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்பதாகும். . இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 99 பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி? இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 1 ()() அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஒக்கும்.