பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

22



திருக்குறளார் தெளிவுரை 22 §, iŮ. மறவற்க மாசற்றார் கேண்மை, துறவற்க துன்பத்துள் துப்புஆயார் நட்பு. # QË துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை வி.ாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மறவாதிருத்தல் வேண்டும். எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. 107 தமக்கு உண்டாகிய துன்பத்தினைப் போக்கியவருடைய நட்பினை எழுமையினையுடைய எழுபிறப்பிலும் பெரியோர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். . நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. iO3 பிறர் செய்த நன்மையினை மறப்பது ஒருவற்கு நல்லதல்ல; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுதல் நல்லதாகும். கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 1 (39 கொல்லுதலைப் போன்றதொரு தீமையினை ஒருவர் செய்தாலும், முன்பு அவர் செய்த நன்மையொன்றினை நினைத்துப் பார்க்க அத்தீமையெல்லாம் கெடும். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு, # 1() கடமையாகச் செய்ய வேண்டுவனவாகிய அவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.