பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

24



திருக்குறள்ார் தெளிவுரை 34 6. கெடுவல்யான் என்பது அறிக: தன்நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செயின். 1 ič ஒருவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமையில் நீங்கி ஒன்றினைச் செய்ய நினைக்குமானால் அந்த நினைப்பு 'யான் கெட்டு விடுவேன்' என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பாக அறிதல் வேண்டும். 7. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117 நடுவு நிலைமையில் நின்று அறத்திலிருந்து வழுவாமல் நின்றவனுடைய வறுமையினைப் பெரியோர்கள் வறுமையாக வைத்து நினைக்க மாட்டார்கள். 8. சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி, 118 முன்பு சமமாக இருந்து, வைத்த பாரத்தினை அளவு காட்டுவதாகிய துலாக்கோல்போல். நன்கு அமைந்திருந்து ஒரு பக்கமாகச் சாயாமலிருப்பது பெரியோர்களுக்கு அழகாகும். 9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். 119 நடுவு நிலைமை என்பது சொல்லுகிற சொல்லில் கோணுதல் இல்லாமல் இருத்தலாகும். மனத்தினியத்தில் கோணுதல் இல்லாமலிருப்பதைத் திண்ணியதாகப் பெற்றிருந்தால் அதுவும் நன்மை பயப்பதாகும், 10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். 120 பிறர் பொருளையும், தம்முடைய பொருளைக் காப்பது போலக் காத்து வாணிபம் செய்தால், அதுவே வாணிபம் செய்பவர்களுக்கு நல்ல வாணிபம் ஆகும்.