பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்29



அறத்துப்பால் இல்லற இயல் 29 15. பிறன் இல் விழையாமை (ஒழுக்கங்கெட்டு பிறனுடைய இல்லாளை விரும்பாதிருத்தல்) 1. பிறன்-பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல், 141 பிறனுக்குப் பொருளாம் தன்மையுடைய இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம் உலகில் அறம் பொருள் நூல்களை ஆராய்ந்து கண்டவரிடத்தில் இல்லையாகும். 2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல், 142 அறத்திற்குப் புறம்பான வழியில் நின்ற எல்லாருள்ளும் பிறனுக்குரிய இல்லாளை இச்சித்து அவனுடைய வாயிலில் சென்று நின்றவர்களைப் போலப் பேதையார் இல்லை. 3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்.இல் தீமை புரிந்தொழுகு வார். 143 தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிருடையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள். - 4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல். 144 தினையளவும் தமது குற்றத்தினைக் காம மயக்கத்தினால் நினையாமல் பிறன் இல்லத்தில் புகுவோர் எவ்வளவு பெருமையுடையவராக இருந்தாலும் என்ன? யாதொரு பயனுமில்லை. 5. எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 145 பிறகு நடப்பதை அறியாமல் எளிமையானதென்று நினைத்துப் பிறனுக்குரிய இல்லாளிடத்தில் நெறிகடந்து செல்லுகிறவன் எக்காலத்திலும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியினை அடைவான்.