பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்31



அறத்துப்பால் இல்லற இயல் 31 16. பொறை உடைமை (பொறுமை என்னும் நற்பண்பைப் பெற்றிருத்தல்) 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151 தன்னைத் தோண்டுபவர்களையும் கீழே வீழாமல் தாங்கிக்கொண்டிருக்கும் நிலத்தினைப் போலத் தம்மை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையான அறமாகும். - . பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 4.52 பிறர் செய்த குற்றத்தினை எப்போதும் பொறுத்துக்கொள்ளுதல் நல்லதாகும். அக்குற்றத்தினை மறந்துவிடுதல் அப்பொறுமையினையும் விடச் சிறந்ததாகும். . இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. 153 ஒருவனுக்கு வறுமையுள் மிகவும் வறுமையாவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதலாகும். அதுபோல வல்லமையுள் மிகவும் வல்லமையாவது அறியாமையால் தீங்கு செய்தவர்களைப் பொறுத்துக்கொள்ளுவதாகும். நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும். 154 ஒருவனுக்கு றையுடைமை என்கின்ற சான்றாண்மைக் குணம் தன்னிடமிருந்து நீங்காதிருக்க வேண்டுமானால், அதனால் பொறுமை என்கின்ற குணம் அழியாமல் காப்பாற்றப் படவேண்டும். - ಶ್ಗ ஒன்றாக வையாரே வைப்பர் பாறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. 155. பிறன் தமக்குத் தீமை செய்தால் பொறுமை இழந்து, தண்டித்தவர்களைப் பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்திற் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக் கொண்டவர்களை எப் போதும் நினைத்து மனத்தில் பொன்போல் கொள்ளுவார்கள்.