பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

32



திருக்குறளார் தெளிவுரை 32 6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ், 156 10. குற்றம் செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு ஏற்படுவது அந்த ஒரு நாளைய இன்பமேயாகும். பொறுத்துக் கொண்டவர்களுக்கு உலகம் அழியும் வரையிலும் பெருமையும் புகழும் உண்டு. . திறன்அல்ல தற்பிறர் செய்யிலும் நோநொந்து அறன்.அல்ல செய்யாமை நன்று. i57 செய்யத் தகாத செயலினைத் தன்னிடத்தில் மற்றவன் செய்தாலும் அத்துன்பத்திற்காக வருத்தப்பட்டு அறமல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லது. . மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். 358 மனத்தில் செருக்குக் கொண்டு தீமையானவற்றைச் செய்பவர்களைத் தாம் தம்முடைய பொறுமையினால் வென்றுவிடவேண்டும். . துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159 நல்வழியிலிருந்து நீங்கியவர்களுடைய தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்கள். துறவறம் பூண்ட முனிவர்களைப் போலத் தூய்மையுடையவர்கள் ஆவார்கள். உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். $50 உண்ணாமல் நோன்பு நோற்றுத் தவம் செய்பவர்கள், எல்லோரினும் பெரியவர்களாவார்கள். அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.